Skip to content
எமது நோக்கங்கள் – Objectives
- பட்டதாரி சேவையைச் சார்ந்த அரச அலுவலர்கள் மத்தியில் காணப்படும் இன்னல்களையும் பிரச்சனைகளையும் உடனுக்குடன் தீர்த்து வைப்பதன் மூலம் அவர்களிடமிருந்து உயரிய அர்ப்பணிப்பு மிக்க சேவையினைப் பெற்றுக்கொள்ளல்.
- பட்டதரி சேவையைச் சார்ந்த அரச அலுவலர்களின் பொருளாதார, சமூக அந்தஸ்தினை வலுப்படுத்தி அதனூடாக அவர்களின் கௌரவத்தினை மேம்படுத்தி நற்பண்புகள் (Ethics) நிறைந்த பொதுச்சேவைக்கு வழிவகுத்தல்.
- பட்டதாரி சேவையைச் சார்ந்த அரச அலுவலர்களிடமிருந்து விளைதிறன்மிக்க அரசசேவையைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களின் தொழில் சார்ந்த தகைமைகளை வழர்த்துக் கொள்ள அல்லது உரியபட்டப்பின் படிப்புகளை அவர்கள் கற்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்தல்.
- இன்றய உலகின் போட்டித் தன்மை மிக்க பொருளாதார வளற்சிக்கும், தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கும் ஏற்றவகையில் அரசசேவையினை வினைதிறன் மிக்க வகையில் செயற்படுத்தத்தக்க ஆற்றல்களை அலுவலர்கள் மத்தியில் வளர்த்துக் கொள்ளல்.
- புத்தாக்க (Innovative) முறையில் சிந்தித்துச் செயலாற்றுதல், புதியஉத்திகளை உள்ளடக்கக் கூடிய, மற்றும் இன்றய உலகுடன் ஒத்துப் போட்டியிடக்கூடிய நுட்பங்களை முன்னிலைப் படுத்தப்படுதும் உத்தியோகத்தர்குளுக்கு அவர்களின் செயற்திறன் (Performance) அடிப்படையிலும், விரைவான பதவி உயர்வுகளை முயன்று பெறத்தக்க (Fast Tract Promotion) முறையிலுமாகப் பட்டதாரி சேவைப் பிரமாணக் குறிப்பினை உருவாக்கிக் கொள்ளல்.
- பட்டதாரி சேவையைச் சார்ந்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கம் ஆங்கிலமொழி அறிவினையும், தகவல்தொழில்நுட்ப அறிவினையும் மேம்படுத்தத்தக்க செயற்திட்டங்களை உருவாக்குதல்.
- தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கத்தக்க, தற்காலத்தின் தேவைகளை நிறைவு செய்யத்தக்க புதியதுறைகளை பல்கலைக்கழகங்களில் தோற்றுவிப்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல்.
- சமுதாய முன்னேற்றத்திற்கும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும் உயர்கல்வியின் அவசியத்தினையும், பட்டப்படிப்பின் அவசியத்தினையும், தொழிற்கல்வி, பட்டப்பின்படிப்புகள் போன்றவற்றின் அவசியத்தினையும் வடமாகாணத்தினைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் உணரச்செயல்தலும் அவற்றினை அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான வழி முறைகளையும் கண்டுகொள்ளலும்.
- உயர்தரக் கல்வியை திறம்பட முடிவுசெய்து பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்குரிய அடிப்படைத் தகுதியைப் பெற்ற அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பினை மேற்கொள்ளத்தக்க வகையில் பல்வேறுபட்ட உரிய கல்வி வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்தல்.
- பட்டதாரிகளுக்கு அரசதுறைகளிலும், தனியார்துறைகளிலும் வேலை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளல்.
- இலவசக் கல்வியின் பயன்களை அனைத்துமக்களும் சமவாய்ப்புடன் பெற்றுக்கொள்ள ஆவன செய்தல்