Skip to content
எமது செயற்பாடுகள் – Activities
- பொதுக்கூட்டங்களையும், செயலவைக் கூட்டங்களையும் காலத்திற்குக்காலம் கூட்டி பட்டதாரி சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களினால் முன்வைக்கப்படும் இனங்காணப்பட்ட விடயங்களுக்கு அவர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டத்திற்கு வருகைதந்த அனைத்து உத்தியோகத்தர்களினாலும் ஏற்றுக்கொள்ளப் பட்டமுடிவுகளினைச் செயற்படுத்தல்.
- அங்கத்தவர்களுக்குத் தேவையான தகவல்களைக் காலத்திற்குக் காலம் வழங்கி வருதல்
- உரியப யிற்சிநெறிகளை இனங்கண்டு அவற்றினை அனைத்து அங்கத்தவர்களுக்கும் வழங்குவதற்கு வழிவகை செய்தல்
- மின்னஞ்சல் பாவனையினை அனைவரிடமும் பரவச்செய்து அதன் மூலம் அங்கத்தவர்கள் மத்தியில் வேண்டிய தகவல் பரிமாற்றத்தினை இலகு படுத்தல்
- அரசசேவையில் புதிதாக உருவாக்கப்படும் ஒழுங்குவிதிகளையும், சுற்று நிருபங்களையும் அங்கத்தவர்கள் மத்தியில் பரவச் செய்தல்
- இணையதளம் ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் புதிய ஆக்கங்கள், தகவல்கள், புதிய செய்திகள், நவீன தொழில் நுட்பங்கள், பொதுவிடயங்கள், ஆராட்சிக்கட்டுரைகள், தற்காலத்தில் கையாளப்படும்
- முகாமைத்துவக் கோட்பாடுகள், மற்றும் அங்கத்தவர்களிற்குத் தேவைப்படும் விடயங்கள் அனைத்தினையும் வெளியிடுதல்.
- அனைத்துப் பட்டதாரி உத்தியோகத்தர்களிடமும் தலைமைத்துவப் பண்பினை வளர்த்துக் கொள்ளும் முகமாகவும், சமுதாயத்தின் அனைத்து விடயங்களிலும் தலைமைப் பொறுப்பினை (Ledership) தாமாகவே ஏற்கும்பண்பு, சமுதாயத்தின் வழர்ச்சியில் பங்கெடுக்கும் பண்பு போன்ற வற்றை வளர்குமுகமாக புதிதாகக் அபிவிருத்திக கூட்டுறவுச் சங்கங்களைத் ஸ்தாபித்தல்.
- அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் வாயிலாக சிறந்த மக்கள் தொடர்பினையும், வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களின் நன்னோக்கு அமைப்புகளினதும் உதவியினைப் பெற்று அதன்வாயிலாக வடமாகாணமாணவர்களின் கல்விவளர்ச்சிக்கு ஒத்துளைப்பு வழங்குதல்.