வடமாகாண அரசசேவைப்பட்டதாரி அலுவலர்கள் சங்கமானது, வடமாகாணம் என வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பினைத் தனது செயற்படு பரப்பெல்லையாகக் கொண்டு அதற்குட்பட்ட பிரதேசங்களிற்குள் அரசசேவையில் ஈடுபடும் பட்டதாரி சேவையைச் சேர்ந்த அனைத்து உத்தியோகத்தர்களினாலும் தமது சமுதாயம் சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த, உற்பத்தித்துறை சார்ந்த நல்லெண்ணச் சிந்தனைகள் மூலம் எய்தப்படும் அபிவிருத்தி என்பதனை அடிப்படையாகக் கொண்ட, அதனை எய்து வதற்கு வழிவகை செய்யத்தக்க செயற்பாடுகளை மூலாதாரமாகக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
இங்கு பட்டதாரி அரச சேவையானது இவ்வெல்லைப் பரப்பினுள் அமைந்த
- வடமாகாணசபையின் நிர்வாகக் கட்டமைப்பினுள் கடமையாற்றும் பட்டதாரி சேவையைச் சேர்ந்த அலுவலர்களின் அபிவிருத்தி முன்னெடுப்புக்களையும்
- உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகக் கட்டமைப்பினுள் கடமையாற்றும் பட்டதாரி சேவையைச் சேர்ந்த அலுவலர்களின் அபிவிருத்தி முன்னெடுப்புக்களையும்
- மத்திய அரசின்நிர்வாகக் கட்டமைப்பினுள் கடமையாற்றும் பட்டதாரி சேவையைச் சேர்ந்த அலுவலர்களின் அபிவிருத்தி முன்னெடுப்புக்களையும்
ஆதாரமாகக் கொண்டு தமது தொடற்சியான அரசசேவையினை வலுப்படுத்தி அதன் மூலம் எய்தத்தக்க அனைத்து அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் ஆதாரமாக அமையத்தக்க ஒரு சேவைவகுதியினைக் கொண்டதாகும்.